நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைக் கடந்தது

by Lankan Editor
0 comment

நாட்டில், மேலும் 435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19ஆயிரத்தைக் கடந்து 19 ஆயிரத்து 276ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 368 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 13 ஆயிரத்து 271பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மேலும், ஐயாயிரத்து 932 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் நேற்று ஒருவர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 74ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment