இது நடந்தால்… புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க தயாராக வேண்டும்: எச்சரிக்கும் பிரித்தானிய நிபுணர்

by News Editor
0 comment

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது, புத்தாண்டில் உற்றார் உறவினர்களை புதைக்க வேண்டிய அபாயத்திற்கு இட்டுச்செல்லும் என பிரித்தானியாவின் முக்கிய சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 9 மாதங்களாக நாம் பேணிவரும் இந்த தியாகத்தை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தொலைக்க வேண்டுமா என முக்கிய சுகாதார நிபுணர் கேப்ரியல் ஸ்கேலி கேள்வி எழுப்பியுள்ளார்.

டிசம்பர் 24 முதல் 28 வரையான நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலை அடுத்தே, கேப்ரியல் ஸ்கேலி தமது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருவது, வருந்தத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ள கேப்ரியல் ஸ்கேலி,

மிகவும் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி விட்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நண்பர்களையும் உறவுகளையும் புதைத்தல் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் பண்டிகை நாட்களை எவ்வாறு செலவிடப் போகிறோம் என்பதைப் பற்றி நாம் மிகவும் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இது மிகவும் ஆபத்தான காலம் மட்டுமல்ல வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பாகும் என தெரிவித்துள்ளார் ஸ்கேலி.

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி உறவினர்களை சந்திப்பது என்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊறுவது போலாகும் என்றார் இன்னொரு சுகாதார நிபுணர்.

Related Posts

Leave a Comment