வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று

by Lankan Editor
0 comment

வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு பிரசன்னமாகியிந்தார்.

கடந்த 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் 4 நாட்களுக்கு வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றுவருகிறது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேலும், வரவுச் செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment