செல்வி அபிலன் அனீஷா நேற்று இரவு அகாலமரணம் அடைந்தார்.

by News Editor
0 comment

எட்டியாந்தோட்டை பனாவத்தை இலக்கம் 2 பிரிவில் வசித்த 17 வயதுடைய செல்வி அபிலன் #அனீஷா நேற்று இரவு அகாலமரணம் அடைந்தார்.

இவர் ஆரம்பக் கல்வியை பனாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்று பின்பு எட்டியாந்தோட்டை சாந்த மரியாள் தமிழ் வித்தியாலயத்தில் சாதாரணதரம் வரை கல்வி பயின்று உயர் கல்வியை கொழும்பு சென் ஏன்ஸ் மகளிர் கல்லூரியில் கலைப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருந்த வேளையில் பாடசாலை விசேட விடுமுறைக்காக தனது ஊருக்கு வந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது..

திடீர் சுகயீனம் காரணமாக நேற்று அதிகாலை 5 மணியளவில் கரவனல்லை வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் தனது அப்பம்மாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்த செல்வி அபிஷா இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்..

இறுதி கிரியை நாளை இடம்பெறும்..

இவரின் ஆத்ம சாந்திக்காக அனைவரும் இறைவனை பிரார்த்திப்போமாக

Related Posts

Leave a Comment