இந்தியா துண்டாடப்படுகிறது – பிரிட்டன் பிரதமரின் முன்னாள் மனைவி வேதனை

by News Editor
0 comment

தற்போது பிரிட்டன் பிரதமராக இருக்கும் போரிஸ் ஜான்சனின் முன்னாள் மனைவி மெரினா வீலர் இந்தியா துண்டாடப்படுவதாக தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார்.

மெரினா வீலரின் தாய் திப் சிங் ஒரு சீக்கியர். அவருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு நீண்டது. மெரினா பிரிட்டனில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள தலையங்கத்தில் என் அம்மா அறிந்த இந்தியாவை தற்போது காணமுடியவில்லை. அதில் சமீப ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றும் வரும் மாற்றங்கள் தனக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவை தோற்றுவித்த தலைவர்கள் சிறுபான்மையினரை மனதில் வைத்து அனைவருக்கும் சமமான அரசியலமைப்பு சட்டம் ஒன்றை இயற்றினர். அதில் அம்பேத்கரின் பங்கு மிக முக்கியமானது.

ஆனால் அது தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து வருகிறது. சட்டத்தின் ஆட்சியும் நீதி அமைப்பும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக என் இந்திய நண்பர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, அயோத்தி வழக்கின் தீர்ப்பு என நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் பெரும்பான்மை வாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அரசுக்கு ஆதரவானவராக அறியப்படுகிற அர்னாப் கோஸ்வாமிக்கு உடனடியாக ஜாமின் கிடைக்கிறது. ஆனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள், பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர்.

அவர்களின் ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிட்டனாரோ என்கிற கேள்வி தான் எழுகிறது. என் அம்மா 15 ஆண்டுகள் மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டியில் பணிபுரிந்தார்.

ஆனால் இன்று இந்தியாவில் அம்னெஸ்டியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. நானும் என் சகோதரியும் வெளிநாடு வாழ் இந்தியர் விசாவிற்கு தகுதியானவர்கள் என அறிந்தோம்.

அதனைப் பெற வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமும் கூட. ஆனால் மாற்றுக்கருத்து உள்ளவரகளை எல்லாம் தேச விரோதிகள் என முத்திரை குத்தும் மோடியின் புதிய இந்தியா என்னைப் போன்றவர்களை ஏற்றுக்கொள்ளாது என்றே தோன்றுகிறது. என் நம்பிக்கை பொய் ஆக வேண்டும் என விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார்

Related Posts

Leave a Comment