16 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் கிரிக்கெட் அணி இதுதான்!

by News Editor
0 comment

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று டி20 போட்டிகளும், 3 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற்றன இந்தத் தொடரில்.

இதில் டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றன. ஒரு போட்டியில் கடும் மழை குறுக்கிடவே அது கைவிடப்பட்டது. எனவே, இரு அணிகளும் இணைந்தே டி20 தொடரைப் பகிர்ந்துகொண்டன.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து வென்றது. மற்ற இரண்டும் ட்ராவில் முடிந்ததால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இந்தத் தொடர் விளையாடும்போதே, இங்கிலாந்து அணியை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யக் கேட்டுக்கொண்டனர் பாகிஸ்தானின் மூத்த வீரர்கள். ஏனெனில், நீண்ட காலம் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு வராமலே இருந்தது.

இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் மண்ணில் விளையாட முடிவெடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் வரும் இங்கிலாந்து அணி இரண்டு டி20 போட்டிகளில் ஆட வுள்ளது.

Related Posts

Leave a Comment