பதவியிலிருந்து இறங்கும் கடைசி நேரத்தில் ட்ரம்ப்பின் மாஸ்டர் பிளான் – சீனாவுக்கு பெரிய ஆப்பு!

by News Editor
0 comment

அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடியவிருக்கும் ட்ரம்ப் இருக்கும் கொஞ்ச நாட்களில் சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு சீன ராணுவத்தோடு நெருக்கமாக இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ட்ரம்ப் நிறுத்திவிட்டார். இருக்கும் கொஞ்ச நாட்களில் சீனா மீது பொருளாதார ரீதியில் ட்ரம்ப் கட்டுப்பாடுகள் விதிக்கப்போகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

அதே போல் தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் ட்ரம்ப் முக்கிய முடிவு எடுக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. சீனாவின் மீன்பிடி திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் சீன அதிகாரிகளுக்கு விசா தடை விதிக்கப் போவதாகவும், எதிர்காலத்தில் பைடன் மாற்ற முடியாத அளவுக்கு தற்போது ட்ரம்ப் மாற்றங்களை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ட்ரம்பின் இந்த மாற்றம் அமெரிக்கர்களுக்கே பிடிக்கவில்லை என்ற தகவல் கசிந்துள்ளன. அதனால் ஜனவரிக்குள் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment