வெளியானது லொஸ்லியா தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை… உண்மை காரணம் இதோ

by News Editor
0 comment

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணம் இயற்கையானது என்று கனடா அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான கவினுடன் ஏற்பட்ட காதலால் சமூகவலைதளங்களில் வைரலானார்.

இந்த நிலையில் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் இருந்து வந்ததால் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன.

மகளின் காதலை மரியநேசன் கையாண்ட விதம் கவினின் தவறை நாசுக்காக அவருக்கு புரிய வைத்த விதம் ஆகியவை கமல்ஹாசனால் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். லாஸ்லியாவுக்கு அப்பாதான் உலகம் என்பதால் அவரது இறப்பால் மிகவும் நொந்து போயுள்ளார்.

அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

ஆனால் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணம் இயற்கையானது என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த கனடா மருத்துவர்கள் சான்றளித்துள்ளார்கள். இதை கனடா அரசும் உறுதிப்படுத்தியது.

மேலும் அவரது உடல் கனடாவிலிருந்து இலங்கைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் கொண்டு வரப்படும் என்றும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment