பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 19,609 பேர் பாதிப்பு

by Editor
0 comment

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 19ஆயிரத்து 609பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 529பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் 7ஆவது நாடாக பிரித்தானியா உள்ளது. மேலும், இதுவரையில் வைரஸ் தொற்றினால், 14இலட்சத்து 30ஆயிரத்து 341பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 53ஆயிரத்து 274பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 420பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related Posts

Leave a Comment