அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 29ஆக பதிவாகியுள்ளது.
மேலும் 11.5 மில்லியன் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உலகில் உள்ள மற்றைய நாடுகளையும் விட, அதிகூடிய தொற்றுப் பரவலையும் மரண எண்ணிக்கையையும் அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.
இதுதவிர, தற்போது மீண்டும் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் தீவிரமடைந்துள்ளது.