2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை தவிர நாட்டின் ஏனைய மாவட்டங்களில் வைத்து விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப் படவுள்ளன.
சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.