உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.5 கோடியை கடந்தது

by Editor
0 comment

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தவாறே உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் நோய்த் தாக்குத்திறன் இன்னும் குறையவில்லை.

உலகளவில்கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,53,35,013 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3 கோடியே 84 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1,331,697 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 15 லட்சத்து 34 ஆயிரத்திற்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

Related Posts

Leave a Comment