பாலாவோட காதல் அவர் கண்னை மறைக்குது’ : நாமினேஷன் ப்ராசஸில் களமிறங்கிய ஹவுஸ்மேட்ஸ்

by News Editor
0 comment

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் என மூவர் வெளியேறியுள்ளனர். தீபாவளி பண்டிகையொட்டி கடந்தவாரம் எவிக்ஷன் இல்லை என பிக் பாஸ் அறிவித்தார். இதையடுத்து நேற்று ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் பேசிய கமல் ஹாசன், போரிங் பர்ஃபாமன்ஸ் , செடி வளர்ப்பு, கேபி – பாலா – ஷிவானி இடையேயான மோதல் குறித்தும் பேசினார்.

அனிதாவுக்கு அதிகம் பேச வாய்ப்பு அளித்த அவர், ஒருகட்டத்தில் அனிதாவின் பேச்சுக்கு இடையே குறுக்கிட்டு எனக்கு புரிஞ்சிடுச்சி, புரியாதவங்களுக்கு தனியா போய் சொல்லுங்க என்றுகூறினார். இதனால் அப்செட்டான அனிதா, கமல் சார் என்ன பேச விட மாட்டுறாரு என்று புதிய புயலை கிளப்பினார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. அதில், அர்ச்சனா, ரியோ, நிஷா, சம்யுக்தா ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்கின்றனர். ஷிவானி, ரமேஷ், ரம்யா ஆகியோர் சுசித்ராவை நாமினேட் செய்கின்றனர். அதேபோல் பாலா, ஆஜித் இருவரும் ஆரியையும், சோம், ஆரி இருவரும் பாலாவை நாமினேட் செய்கின்றனர். இதில் பாலாவின் காதல் அவர் கண்ணை மறைக்கிறது என்று ஆரி சொல்வது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Related Posts

Leave a Comment