15 துப்பாக்கி குண்டுகள்..ஒரு மாதமாக உயிருக்கு போராட்டம்..ஒரு தேசமே கண்ணீர் அஞ்சலி

by News Editor
0 comment

தாய்லாந்து காடுகளில்தான் யானைகள் அதிகம் வாழ்கின்றன. 2 ஆயிரம் யானைகள் வாழ்ந்து வரும் அந்நாட்டில் யானைதான் தேசிய விலங்கு. 90 சதவிகிதம் காடுகளாக இருந்த தாய்லாந்து தற்போது 31 சதவிகிதமாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் சுயநலத்திற்காக வனங்களை அழித்து விளைநிலங்கள் ஆக்கிவிட்டார்கள். இதனால் மனித -யானைகள் மோதல் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த மோதலில்தான் என்கா சன் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ரேயாங் மாகாணத்தில் உள்ள தோப்பில் என்கா சன் யானையை மீண்டும் யானை மயங்கி கிடந்தது. உடல் முழுவதும் 15 இடங்களில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக கிடந்தது. குண்டுகள் பாய்ந்து அவஸ்தை பட்டு வந்த அந்த யானையின் புகைப்படம் வைரலாகி பலரையும் வருந்தச் செய்தது. மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் சேர்ந்து காப்பாற்றி மீண்டும் காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.

ஆனால், காட்டுக்குள் சென்ற சில நாட்களிலேயே என்கா சன், சேற்றுக்குள் சிக்கி அவஸ்தைப்பட்டு வந்ததை கவனித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தது. தேசமெங்கிலும், நேரிலும் சமூக வலைத்தலங்களிலும் அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment