குழந்தைக்கு “வெட்னஸ்டே” என பெயர் சூட்டிய ஹாரிபாட்டர் நடிகர்!

by News Editor
0 comment

ஹாலிவுட் நடிகர் ருபேர்ட் கிரின்ட் தனது ஆறு மாத குழந்தையின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

ஹாலிவுட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கக் கூடிய ஒரு கதாபாத்திரம் தான் ஹாரிபாட்டர். ஹாரிபாட்டர் கதைகள் ஹாலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், கோலிவுட் என அனைத்து தரப்பு ரசிகர்களாலும் வரவேற்க கூடியவை. அதில் ரோன் வெஸ்லே கதாபாத்திரத்தில் தோன்றும் நட்சத்திரம் தான் ருபேர்ட் கிரின்ட்.

ருபேர்ட் கிரின்ட் சமீபத்தில் தான் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய இரண்டு நாட்களிலேயே 2.5 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார்.

இவருக்கு கடந்த மே மாதம் கேர்ள்பிரண்டு ஜோர்ஜியா க்ரூம்வுடன் பெண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கிய முதல் வேலையாக இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வெட்னஸ்டே என பெயரிட்டு இருப்பதையும் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

ருபேர்ட் கிரின்ட் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தால் தனது கதாபாத்திரமான “ரோன்” என்ற பெயரை வைத்திருப்பாராம்.

Related Posts

Leave a Comment