தந்தையின் திடீர் மரணம்… அப்பாவின் பிரிவை அன்றே கண்ணீர் மல்க கதறிய லொஸ்லியா! தீயாய் பரவும் காட்சி

by News Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லொஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை நேற்று திடீரென காலமாகியுள்ளார். எதனால் அவர் உயிர்பிரிந்தது என்பது தெரியாத ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகுதான் நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் தனது மகளை கண்டித்தது மட்டுமன்றி தனது மகளை காதலிக்கும் கவினையும் நாசூக்காக அவரது தவறை எடுத்துக் கூறியது ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்ததாக பலர் கருத்து கூறினர்.

இந்த நிலையில் நேற்று லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென காலமானதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது மட்டுமின்றி லொஸ்லியாவும் இதனை உறுதி செய்துள்ளார்.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த தருணத்தில் அவரது தந்தை குறித்து பேசியதும், அவரது தந்தையின் வருகையின் போது நடந்ததையும் தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. லொஸ்லியா ஆர்மியினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பா குறித்து கண்கலங்கி அழுத காட்சி தற்போது தீயாய் பரவுகின்றது.

Related Posts

Leave a Comment