ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்

by Lifestyle Editor
0 comment

நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றிக் கொடுப்பாள் ஸ்ரீ சந்தானலட்சுமி. கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள். ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷம் நீங்கும். சகல செல்வங்களையும் தந்து சந்தான லட்சுமி அருள்புரிவாள்.

சந்தானம் என்றால் குழந்தை என்று அர்த்தம். சந்தானம் எனப்படும் குழந்தை பாக்கியம் தந்தருளும் லட்சுமியாக சந்தானலட்சுமியாத் திகழ்கிறாள். மேலும் நம் சந்ததி வளரவும் செழிக்கவும் சகல ஐஸ்வரியங்களுடன் பரம்பரை பரம்பரையாக வாழவும் வழிவகைகள் செய்து அருளுகிறாள் அன்னை சந்தானலட்சுமி.

ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம் :

ஜடாமகுட சம்யுக்தாம்
ஸ்த்தி தாசந சமந்விதாம்
அபயம் கடகஞ் சைவ பூர்ணகும்பம்
புஜத்வயே கஞ்சுகம் ச்சந்த
வீரஞ்ச மெளக்திகம்
சாபிதாரீணீம் தீபசாமர நாரீபி:
சேவிதாம் பார்ச்வ யோர்த்வயோ
பாலே சேநாநி சங்காசே கருணாபூரி
தாநநாம் மஹாராஞ் ஞீஞ்ச
சந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பெளர்ணமி முதலான நாட்களில் அவசியம் சொல்லி வாருங்கள். கேசரி அல்லது ஏதேனும் இனிப்பு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.

நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றிக் கொடுப்பாள். கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள். ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷம் நீங்கும். சகல செல்வங்களையும் தந்து சந்தான லட்சுமி அருள்புரிவாள்.

Related Posts

Leave a Comment