முருகன் ஸ்லோகம்

by Lifestyle Editor
0 comment

வீடு நிலம் அல்லது காடு கழனி தோட்டம் வாகனம் இப்படியாக என்ன சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் இருந்தாலும் சரி, தேய்பிறை சஷ்டியில் இருந்து 15 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எப்போதுமே வாழ்க்கையில் வளரக் கூடிய சூழ்நிலை வேண்டுமென்றால், வளர்பிறையில்தான் பரிகாரத்தை செய்ய வேண்டும்.

முதலில் சுத்தமான அருகம்புல்லை எடுத்து கழுவி, சிவப்பு நிற நூலில் தொடுத்து மாலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கம்போல பூஜை என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, முருகனுக்கு நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் நல்லெண்ணெயில் தீபமேற்றி கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

தயாராக இருக்கும் இந்த அருகம்புல் மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் முருகனின் திரு உருவ படத்திற்கு அணிவித்து விட்டு, அதன்பின்பு ஒரு மனப் பலகையின் மீது, அமர்ந்து, பின் வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்யும்போது, முருகனுக்கு கட்டாயம் நிவேதனமாக ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். இரண்டு பேரீச்சம்பழங்களை ஆவது நைவேத்தியமாக வையுங்கள். அது தான் சரியான முறை. உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியைத் தரக்கூடிய அந்த மந்திரம் இதோ!

ஓம் மங்கள கார்த்திகேயா
சரவணபவா ஹ்ரீம் காரிய
சித்திதராயே நமோ நம!

இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. 27 க்கும் மேல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் உச்சரித்து கொள்ளலாம். அதில், எந்த ஒரு தவறும் கிடையாது. பொதுவாகவே அருகம்புல் என்றால், விநாயகருக்கு தான் சமர்ப்பணம் செய்வோம். ஆனால் இந்த வழிபாட்டு முறையில் சிவப்பு நிற நூலில் தொடுத்த அறுகம்புல்லை முருகப்பெருமானுக்கு அணிவித்து வழிபாடு செய்தோமேயானால், நிச்சயம் கை மேல் பலன் உண்டு.

Related Posts

Leave a Comment