பிரபல ரவுடி வெட்டிக்கொலை

by Lifestyle Editor
0 comment

சென்னை அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியை சேர்ந்தவர் ரவுடி பாலாஜி என்கிற போண்டா பாலாஜி(27). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாலாஜி நேற்று இரவு, அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில்வசிக்கும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், பாலாஜியை வழிமறித்து பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜியின்உறவினர்கள் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்து எரித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

மேலும், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய அம்பத்தூர் போலீசார்,கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பாலாஜியின் மாமனார் வீட்டின் அருகே வசிக்கும் சதீஷ்குமார் என்பவர், தனதுவீட்டில் நகைகள் திருடுபோனது தொடர்பாக பாலாஜியின் தம்பி சீனிவாசனை தேடி வந்ததும், இந்த நிலையில் தமது பகுதிக்கு வந்த பாலாஜியை, அவர்கூட்டாளிகளுடன் இணைந்து படுகொலை செய்ததும் தெரியவந்தது.

Related Posts

Leave a Comment