கேப்டன் பதவியில் ரோகித் சர்மா அமைதியானவர், ஜென்டில்மேன்

by Lifestyle Editor
0 comment

புதுடெல்லி:

ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா 5 ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளார். இதையொட்டி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் காம்பீர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

ரோகித் சர்மா கேப்டன் பதவியில் அமைதியாக செயல்படுகிறார். அவர் கூல் கேப்டன். மேலும் அவர் ஜென்டில்மேன் ஆவார். ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு உலக நாடுகள் மற்றும் இந்திய வீரர்களை கொண்ட அணியை அவர் சிறப்பாக வழி நடத்தினார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கிறார்.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலக இதுவே சரியான நேரம். ரோகித் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும். அவரது சாதனைகள் இதை சொல்லும்.

ரோகித் சர்மா திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவர் ஒருவராவார். 50 ஓவர் போட்டிகளில் சில இரட்டை சதங்களை அடித்துள்ளார்.

20 ஒவர் போட்டிகளிலும் ரன்களை குவித்துள்ளார். ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் முழு உடல் தகுதி இல்லாவிட்டாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment