கொரோனா நோயாளர் சிகிச்சைக்காக தயார் நிலையில் மேலும் சில வைத்தியசாலைகள்

by Editor
0 comment

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் சில வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேவை கருதி குறித்த வைத்தியசாலைகளில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 36 சிகிச்சை நிலையங்களில் கொரோனா நோயாளர்களுக்கு தற்போது சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையங்களில் 2800 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

Related Posts

Leave a Comment