சர்ச்சுக்குள் நுழைந்த பெண் செய்த காரியம்.

by Editor
0 comment

ஒரு கிறிஸ்துவ வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை சர்ச்சில் கல்யாணம் செய்ய முற்ப்பட்ட போது அந்த திருமணம் போலீசுடன் வந்த காதலியால் நிறுத்தப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில், தெலுங்கானாவில் ஜங்கான்மாவட்டத்தில் வசிக்கும் அனில் என்பவருக்கும் ஒரு மைனர் பெண்ணுக்கும் திருமணம் கடந்த வாரம் நடக்கவிருந்தது .

மணமக்கள் மோதிரம் மாற்றி கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அங்குள்ள பாதிரியார் ,அங்கு திருமண விழாவிற்கு வந்தவர்களிடம் இந்த திருமணத்தில் யாருக்காவது ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்டார் .அப்போது “நிறுத்துங்க கல்யாணத்தை”என்று திடீரென ஒரு பெண்ணின் குரல் கேட்டது .அப்போது அங்கு வந்தவர்ககள் அனைவரும் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தார்கள் .

அப்போது அங்கு ஒரு இளம் பெண் போலீசுடன் நின்று கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்ணிடம் அந்த பாதிரியார் வினவியபோது ,தன்னை இந்த அணில் என்ற மாப்பிள்ளை காதலித்து விட்டு ஏமாற்றி விட்ட்டாரென்றும் ,தன்னை ஏமாற்றி விட்டு இன்னொரு மைனர் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் அதனால் இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டுமென்றும் கூறினார் .உடனே அந்த மைனர் பெண்ணோடு அந்த வாலிபருக்கு நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது .அதனால் அவர் மீது திருமண மோசடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .பின்னர் போலிசார் மாப்பிளையை அந்த தேவாலயத்திலிருந்து கைது செய்து அழைத்து சென்றார்கள் ,திருமணத்திற்கு வந்திருந்த மண பெண்ணின் உறவினர்கள் சோகமயமாக திரும்பி சென்றார்கள்.

Related Posts

Leave a Comment