15 வயது சிறுமியை கடத்த முயற்சி;

by Lifestyle Editor
0 comment

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்செல்ல முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி பாட்டூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, கடந்த செப்டம்பர் மாதம் மிட்டாளத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் ஆசை வார்த்தை கூறி கடத்திச்செல்ல முயன்றுள்ளார்.

அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவரை மீட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அஜீத்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அஜீத்குமாரை அதிரடியாக கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Posts

Leave a Comment