சிலிண்டர் வெடித்து விபத்து

by Lifestyle Editor
0 comment

ஆரணி அருகே சிலிண்டர் வெடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதுகாமூர் ரோடு பகுதியில் முக்தாபாய் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த சில நாட்களாக எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இன்று முக்தாபாய் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 3 வீடுகள் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் வீட்டில் சிலிண்டர் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment