பட்டாசு விழுந்து 6 குடிசைகள் தீக்கிரையாகின

by Editor
0 comment

மதுரவாயலில் தீபாவளி பட்டாசு வெடித்து 6 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.

மதுரவாயல் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவரின் வீட்டு மாடியில் உள்ள 6 குடிசை வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் வெடித்து சிதறிய பட்டாசு ஒன்று நெல்சனின் குடிசை வீட்டின் மீது விழுந்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகருகே இருந்த பி குடிசை வீடுகளிலும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதுகுறித்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மதுரவாயல், ஜெ.ஜெ. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் குடிசை வீடுகள் அனைத்தும் தீக்கிரையாகின. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment