அனைத்து நடிகர்களின் சாதனையை அடித்து நொறுக்கிய விஜய்யின் மாஸ்டர் டீசர்

by Editor
0 comment

தளபதி விஜய்யின் மாறுபட்ட புதிய நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய்யுடன் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

நேற்று மாலை 6மணிக்கு மாஸ்டர் டீசர், ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியானது. வெளிவந்த சில மணி நேரங்களில் பல சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து மாஸ்டர் டீசர் சாதனை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் மாஸ்டர் டீசர் கடந்த 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் கடந்த 16 மணி நேரத்தில் 1.6 மில்லியன் லைக்ஸ் பெற்ற ஒரே இந்திய டீசரும் மாஸ்டர் தான் என்று கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment