டாப்-4 கொரோனா தடுப்பு மருந்துகள்…

by Editor
0 comment

புதுடெல்லி:

உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மருந்துகளின் மொத்த உற்பத்தியில் பெரும்பாலான மருந்துகளை பெறுவதற்கான ஒப்பந்தங்களை வளர்ந்த நாடுகள் பெற்றுவிட்டன.

அஸ்ட்ரா ஜெனேகா, நோவாவேக்ஸ், சனோபி ஜிஎஸ்கே, பைசர், பயோன்டெக் ஆகிய மருந்துகளை பெறுவதற்கு அதிக அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில் அஸ்ட்ரா ஜெனேகா மருந்தின் 2.4 பில்லியன் டோஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. நோவாவேக்ஸ் மருந்தின் 1.3 பில்லியன் டோஸ்களும், சனோபி ஜிஎஸ்கே மருந்தின் 732 மில்லியன் டோஸ்களும், பைசர், பயோன்டெக் மருந்தின் 526 மில்லியன் டோஸ்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

இதில் நோவாவேக்ஸ் மருந்தை அதிக அளவில் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருப்பது இந்தியாதான். சனோபி ஜிஎஸ்கே, பைசர், பயோன்டெக் மருந்துகளை வாங்க இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை.

அஸ்ட்ரா ஜெனேகா மருந்தை இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

Related Posts

Leave a Comment