தடையை மீறி பட்டாசு வெடித்த டெல்லிவாசிகள்..

by Lifestyle Editor
0 comment

டெல்லி: பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தடையை மீறி டெல்லிவாசிகள் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு ஏற்பட்டது.

டெல்லியில் எப்போதும் குளிர்காலம் தொடங்கியதும் காற்று மாசுப்படும். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாகவே டெல்லியில் காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது

கடந்த ஆண்டு இது போன்று காற்று மாசால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கெனவே காற்று மாசை கருத்தில் கொண்டு இந்த மாதம் 30 ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் தடையை மீறி பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருந்தது.

காற்றின் தரம் குறித்த ஆய்வில் டெல்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றில் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.

டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் டெல்லி முழுவதும் உயர் கட்டடங்கள், மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் மக்கள் சிரமமடைகிறார்கள். தடையை மீறி பட்டாசு வெடித்த 21 பேரும், பட்டாசு விற்ற 55 பேரும் என ஆக மொத்தம் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Posts

Leave a Comment