சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு

by News Editor
0 comment

மகர, மண்டல விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலையில் புகழ்பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2021ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தினசரி 1,000 பக்தர்களும், சனி-ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு பூஜை நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment