ஆரம்பத்தில் டிரம்பை நம்பாத மெலனியா! தன்னை விட 24 வயது அதிகமானவருடன் காதலில் விழுந்தது எப்படி? ஒரு காதல் ப்ளாஸ்பேக்

by News Editor
0 comment

அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோற்று போனது அனைவரும் அறிந்த செய்தி.

இதற்கு சரிசமமாக பேசப்படும் ஒரு செய்தி டிரம்பின் திருமண வாழ்க்கை ஊசலாடுவதாக கூறப்படுவது தான்.

முன்னாள் மொடலான மெலனியா தமது கணவர் டிரம்புடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து கோரவுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.

ஆனால் அதிகாரபூர்வமாக இது தொடர்பில் இருவரும் பேசவில்லை.

டிரம்புக்கு தற்போது 74 வயதாகும் நிலையில் மெலனியாவுக்கு 50 வயதாகிறது. அதாவது இருவருக்கும் 24 வயது வித்தியாசம் ஆகும். டிரம்ப் – மெலனியா இடையே காதல் மலர்ந்த கதை மிக சுவாரசியமானது ஆகும்.

 

ஆரம்பத்தில் டிரம்ப் மீது மெலனியாவுக்கு நம்பிக்கை இல்லை, தோழிகளிடம் டிரம்ப் குறித்த சந்தேகங்களை கலந்தாலோசித்து உள்ளார் மெலனியா.

ஆனால், டிரம்ப் வெளிப்படுத்திய காதலின் காரணமாக இவர்கள் ஏழு வருடம் காதலித்து, பிறகு திருமணம் செய்துக் கொண்டனர்.

முதல் முறையாக இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட போது. டிரம்புக்கு வயது 52. மெலனியாவுக்கு வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த நியூயார்க் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் தான் முதல் முறையாக டிரம்ப்பும் – மெலனியாவும் சந்தித்துக் கொண்டனர்.

ஃபேஷன் ஷோவில் நடந்த பார்ட்டியில் கலந்துக் கொள்ள வந்திருந்தார் டிரம்ப். அவர் மெலனியாவை சந்தித்து பேசி டேட் செய்த இடம் பாத்ரூம் என்று அறியப்படுகிறது.

 

மெலனியாவை கண்டவுடனே ஈர்ப்படைந்த டிரம்ப் அவரிடம் தொடர்பு எண் கேட்டுள்ளார். ஆனால், தனது எண்ணை அளிக்காமல், டிரம்ப்பின் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டாராம் மெலானியா.

2005ம் ஆண்டு சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மெலனியா, டிரம்ப்பை கண்டதுமே ஈர்ப்பு கொண்டேன். முதல் முறையிலேயே ஒரு ஸ்ட்ராங் கெமிஸ்ட்ரி, எனர்ஜி வெளிப்பட்டது.

நாங்கள் சிறந்த நேரத்தை பகிர்ந்துக் கொண்டோம். முதல் முறையில் இருந்தே நாங்கள் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேச துவங்கினோம் என்று கூறியுள்ளார்.

மெலனியா ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக டேட்டிங் செய்து வந்த டிரம்ப், 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 காரட் வைரத்தால் உருவான 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான வைர மோதிரத்தை அணிவித்து ப்ரபோஸ் செய்தார்.

மெலனியாவும் டிரம்ப்பின் பிரபோசலை ஏற்றுக் கொண்டார். 2005ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். ப்ளோரிடாவில் இருக்கும் பாம் கடற்கரையில் இவர்களது திருமணம் நடந்தது. திருமணமான போது டிரம்ப் வயது 58, மெலானியா வயது 34

மெலனியா டிரம்ப்பின் மூன்றாவது மனைவி. இவருக்கு முன் இவானா (1977 -1992) மற்றும் மார்லா (1993 – 1999) என்ற இருவரை அவர் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment