தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ466 கோடிக்கு மது விற்பனை

by Lifestyle Editor
0 comment

சென்னை: தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மதுபான கடைகளில் வழக்கமான நேரங்களைக் காட்டிலும் கூடுதல் விலைக்கும் மதுவிற்பனை தொடருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்ட வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தில்தான் அதிகபட்சமாக ரூ103.82 கோடிக்கு மது விற்பனையானது.

2-வது இடத்தில் திருச்சி மண்டலம் உள்ளது. திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ95.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3-வது இடத்தில் சென்னை மண்டலம் உள்ளது.

சென்னை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ94.36 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டாஸ்மாக் மதுபான கடைகளில் 2 நாட்களில் ரூ455 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

Related Posts

Leave a Comment