பாகிஸ்தானில் தீபாவளி பண்டிகை

by Lifestyle Editor
0 comment

இஸ்லாமாபாத்:

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதையடுத்து, பல்வேறு உலக நாடுகளில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், வழிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தானிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் அங்குள்ள கோயில்களில் விளக்குகளை ஏற்றி வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலில், பக்தர்கள் இணைந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். தங்கள் வீடுகளிலும் வண்ணக்கோலங்கள் வரைந்து, தீபங்களை ஏற்றிவைத்தனர். பின்னர் பட்டாசுகளை வெடித்தும், தங்கள் சுற்றத்தாருக்கு இனிப்புகளை வழங்கியும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Posts

Leave a Comment