ரஷ்யாவை விரட்டும் கொரோனா

by Lifestyle Editor
0 comment

மாஸ்கோ:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனா வைரஸ் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 19 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 391 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 834 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 14.25 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.44 லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

Related Posts

Leave a Comment