இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு – புதுமுக வீரர்கள் தேர்வு

by News Editor
0 comment

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு – புதுமுக வீரர்கள் தேர்வு
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
மெல்போர்ன்:

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

புதுமுக வீரர்களான புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டெஸ்டில் விளையாடியது கிடையாது.

வீரர்கள் விவரம்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:–

டிம் பெய்ன் (கேப்டன்), மார்னஸ் லபுசேன், டேவிர் வார்னர், ஸ்டீவ் சுமித், மேத்யு வாடே, ஜோபர்னர்ஸ், கும்மின்ஸ், ஹாசல்வுட், டிரெவிஸ்ஹெட், நாதன் லயன், பேட்டின்சன், ஸ்டார்க், புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட்.

Related Posts

Leave a Comment