குருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏழாம் இடத்தில் குரு! உச்சக்கட்ட யோகத்தைப் பெறும் கடகம்

by News Editor
0 comment

குரு பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு களத்திர குருவாக ஏழாம் வீட்டில் அமரப்போகிறார் குரு பகவான்.

வாக்கியப்பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் ஐப்பசி 30, நவம்பர் 15ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி கார்த்திகை 5ஆம் நாள், நவம்பர் 20ஆம் தேதி நிகழப்போகிறது.

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் மன அழுத்தங்கள் முடிவுக்கு வரும் சுகமும் சந்தோஷங்களும் அதிகரிக்கப் போகிறது.

குரு தனுசு ராசியில் ஆறாம் இடத்தில் கேது உடன் இருந்தவரை ஒரு சில கடன் பிரச்சினைகள், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள், அலுவலகப் பணிகளில் ஒரு சில இடர்பாடுகள், தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் வந்து மருத்துவமனைக்கு போய் வந்தீர்கள். இனி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

குருபகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்து யோகத்தை கொடுக்கப்போகிறார். உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக உங்களுடைய ராசியை பார்வையிடுகிறார் குரு. இதுநாள் வரை உங்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கும். மன சஞ்சலங்கள் முடிவுக்கு வரும் காரணம் குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம்.

திடீர் திருமண யோகம்
ஏழாம் வீட்டில் வரும் குருவினால் இல்லற வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு திடீர் திருமண யோகம் வரும். சனியின் பார்வையால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி குருவின் பார்வையால் குழப்பம் நீங்கும். குரு பார்வை லாப ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும்.

தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு வாகன யோகம் வரும். சுய தொழில் செய்வதற்கான யோகம் வருகிறது. குழந்தை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சுப விஷேசங்கள் நிறைய நடைபெறும்.

சந்தோஷம் அதிகரிக்கும்
குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். மன அழுத்தங்கள் போகும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். ராசிக்கு மூன்றாம் வீட்டில் குருவின் பார்வை படுவதால் சகோதர வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

கடன் பிரச்சினை நீங்கும்
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புத்திர ஸ்தானத்தில் இருந்த தோஷங்கள் விலகும். கடன் நெருக்கடிகள் விலகும். மறைமுக எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள்நீங்கும் பயம் பதற்றம் விலகும். வாரக்கடன்கள் வசூலாகும். நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். தகப்பனார் வழியில் இருந்த சொத்து பிரச்சினைகள் தீரும்.

தொழில் தொடங்கும் யோகம்
குரு பெயர்ச்சிக்குப் பிறகு புதிய வேலைகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திற்கு வெளியூர் இடமாற்றம் ஏற்படும். திடீர் பதவிகள் தேடி வரும் சிலருக்கு புரமோசன் தேடி வரும். இடமாற்றம் பதவி மாற்றம் தேடி வரும்.

புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் தேடி வரப்போகிறது. தாமதப்பட்டுக் கொண்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து தொழில் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம் என்ன
குரு பலன் இருப்பதால் லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது குருவின் பார்வை கிடைக்கிறது. கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

ஆண் பெண்கள் இடையே திடீர் ஈர்ப்பு வரலாம். குரு பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு நீங்க சிவ ஆலயங்களுக்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கலாம். தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நிறைய நடைபெறும்.

Related Posts

Leave a Comment