சாதிப் பெயரை நீக்க மாட்டேன்: அமெரிக்காவிலிருந்து தமிழ் பெண்ணின் பரபர டுவிட்

by News Editor
0 comment

அமெரிக்காவில் ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் தமிழகத்தை சேர்ந்த செலின் கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார்.

இச்செய்தி அறிந்து செலின் கவுண்டரின் சொந்த ஊரான பெருமாபாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கவுண்டர் என்ற பெயரை அவர் இணைத்துக் கொண்டது ஏன் என்ற விவாதம் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது.

இதற்கு விளக்கமளித்துள்ள செலின் கவுண்டர், எனது அப்பா 1970களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து விட்டார். நடராஜ் என அமெரிக்கர்கள் அழைக்க சிரமப்பட்டதால், கவுண்டர் என்பதை வைத்துக்கொண்டார்.

அதுவே எனது பெயருடன் இணைந்தும் கொண்டது, அப்பெயரை நான் நீக்க மாட்டேன், அது என் அடையாளம், வரலாறு என தெரிவித்துள்ளார்.

இந்த பதிலுக்கு ஆதராகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave a Comment