விஜய் என்னை நடுரோட்டில் நிற்க வச்சுட்டான்- புலம்பிய சந்திரசேகர்

by News Editor
0 comment

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய்.

சில மாதங்களாக அரசியலில் வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனது மகன் அரசியலில் ஈடுபடுவார் என்று அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆணித்தரமாக கூறினார். ஆனால் தளபதி விஜய் பகிரங்கமாக மறுத்துவிட்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிளவு சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பலரால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது தமிழ்சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரபல எழுத்தாளரான கலைமணி அளித்த பேட்டியின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் “தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் மிக நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது.

தளபதி விஜய்க்கு படிப்பைவிட நடிப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதன்பின் எஸ்.ஏ சந்திரசேகரன், பிடிவாதமாக விஜய் நடிக்க விரும்பியதால் 2 வீட்டை விற்று தான் விஜய்யை ஹீரோவாக வைத்து 2 படம் எடுத்தார். எடுத்த படமும் படு தோல்வியடைந்தது. என்ன நடுரோட்டில் நிற்க வச்சுட்டான்.

அதுக்கப்புறம் நான் விஜய நடிக்காத நடிக்காதனு பெல்டால அடிச்சாலும் திருந்த மாற்றான் என்று அழுகாத குறையாக புலம்பினார் எஸ்ஏ சந்திரசேகரன்” என பிரபல எழுத்தாளர் கலைமணி பேட்டியளித்திருக்கிறார்.

ஆரம்பகாலத்தில் விஜய் பெல்டால் அடி மிதிகளை வாங்கியும் பல அவமானங்களை சந்தித்தும் தற்போது இந்த இடத்தில் உயர்ந்திருப்பது ரசிகனாக பெருமை பட வைக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment