சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில் வெடி குண்டுத் தாக்குதல்

by Editor
0 comment

சவுதி நகரமான ஜெட்டாவில் வெளியுறவு தூதர்கள் கலந்து கொண்ட நினைவு நாள் விழாவில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) காலை முஸ்லிமல்லாதவர்களுக்கான கல்லறையில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் வெடித்ததாக பிரான்ஸ், கிரேக்கம், இத்தாலி, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

கிரேக்க துணைத் தூதரக ஊழியரும் சவுதி பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்திருப்பதை சவுதி அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஒரு பிரித்தானியரும் சிறு காயங்களுக்கு ஆளானதை சர்வதேச ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

விழா மீதான தாக்குதல் ‘கோழைத்தனம்’ என்று மக்கா மாகாண அரசு விபரித்ததுடன், பாதுகாப்புப் படையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் செங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள துறைமுக நகரமான ஜெத்தாவில் கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு முதலாம் உலகப் போரின்போது உயிரிழந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் முதலாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 102ஆவது ஆண்டு விழா நேற்று (புதன்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இதன்போதே இந்த குண்டுவெடித்துள்ளது.

கடந்த மாதம், ஜெட்டாவில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகத்தில் ஒரு காவலர் ஒரு சவுதி மனிதரால் குத்தப்பட்டு காயமடைந்தார். அதே நாளில் பிரான்ஸ் நகரமான நைஸில் நடந்த கத்தி தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

சவுதி அரேபியாவில் செங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் முதலாம் உலகப் போரின்போது உயிரிழந்த ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் சிலரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment