ஆப்கானில் வெடிகுண்டு தாக்குதல்களால், கடந்த 3மாதத்தில் 876 பொதுமக்கள் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களால் 876 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்பிற்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து நடைபெறும் இந்தத் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களால் இதுவரை 876 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் 1685 பேர் வெடிகுண்டு தாக்குதல்களில் படுகாயமடைந்துள்ளனர். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 43 சதவிதம் அதிகரித்துள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வெடிகுண்டு தாக்குதல்களினால் உயிரிழந்த பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கு அறியப்படாத கிளர்ச்சியாளர்களும் (55 சதவீதம்) மற்றும் தலிபான்களும் (42 சதவீதம்) காரணமாக உள்ளனர்.

சமாதான முன்னெடுப்புகளை முன்னோக்கி நகர்த்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment