மேல் மாகாணத்துக்கான அனைத்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தம்

by Lankan Editor
0 comment

மேல் மாகாணத்துக்கான அனைத்து போக்குவரத்துகளும், இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளதை அடுத்தே, அனைத்து பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தை விட்டு வெளியே செல்லும், மேல் மாகாணத்துக்குள் நுழையும் அனைத்து பேருந்து சேவைகளும், வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நேற்றிரவு 10 மணியில் இருந்து மேல் மாகாணத்தில் இருந்தான அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் மேல் மாகாண எல்லை வரை, வழக்கம் போல இடம்பெறும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் நளின் மிரிந்த தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேல் மாகாணத்துக்குள்ளே பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, மேல் மாகாணத்துக்குள் ரயில்கள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் எனினும், மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படாது என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment