எடுப்பார் கைப்பிள்ளை, முதுகெலும்பில்லாதவர், சர்வாதிகாரி: ஒரு வார்த்தை சொன்னதற்காக போரிஸ் ஜான்சனை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் காதலி

by News Editor
0 comment

எடுப்பார் கைப்பிள்ளை, முதுகெலும்பில்லாதவர், சர்வாதிகாரி என்றெல்லாம் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார், அவரது முன்னாள் காதலியான ஜெனிபர் அர்க்குரி (35).

இந்த திட்டு திட்டுவதற்கு போரிஸ் ஜான்சன் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? வேறு ஒன்றுமில்லை, அதிகாரப்பூர்வமாக அதிபர் என அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார் போரிஸ், அவ்வளவுதான்.

ட்வீட் ஒன்றில், தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொல்வதற்காக ஜோ பைடனுடன் தொலைபேசியில் பேசினேன்.

இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள கூட்டாய்மை வலுப்படுவதை எதிர்நோக்கியுள்ளேன், சீதோஷ்ண நிலை மாற்றத்தை கையாளுவதுமுதல், ஜனநாயகத்தை மேம்படுத்துவது, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு சமுதாயத்தை சிறப்பாக கட்டியெழுப்புவது வரை ஒரே எண்ணம் கொண்ட நமது முக்கிய பணிகளில் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் போரிஸ்.

இந்த ட்வீட்டுக்குத்தான் அவரது முன்னாள் காதலி அப்படி ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். போரிஸ் ஜான்சனில் ட்வீட்டுக்கு பதில் ட்வீட் போட்டுள்ள ஜெனிபர், அலெக்சாண்டர் என்னும் அவமானமே, அருவருப்பூட்டும் போரிஸ் ஜான்சனே, இன்னமும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஊடகங்களில் வெளியாகவில்லை, உன்னுடைய ட்வீட் நீ உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது, உலகமே அதைப் பார்க்கிறது.

வழவழா கொழகொழா ஜெல்லி, முதுகெலும்பில்லாதவனே, வேறு வார்த்தைகளில் சொன்னால், நீ 100 சதவிகிதம் எடுப்பார் கைப்பிள்ளை, என அசிங்கமாக திட்டியிருக்கிறார் ஜெனிபர்.

அலெக்சாண்டர் என்பது போரிஸ் ஜான்சனின் நடுப்பெயர்! இந்த பெயரில்தான் ஜெனிபர் போரிஸ் மொபைல் எண்ணை தனது மொபைலில் பதித்து வைத்திருக்கிறார். போரிஸ் தனது இரண்டாவது மனைவி Marina Wheelerஉடன் வாழ்ந்த நேரம் அது.

அப்போதுதான் போரிஸுக்கும் ஜெனிபருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக பிரச்சினை வெடிக்க, பின்னர் பொலிஸ் விசாரணை மேற்கொண்டு, இருவருக்குமிடையில் அந்தரங்கமான உறவு இருந்திருக்கலாம், ஆனால், அவர்கள் இருவரும் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறியது.

ஜெனிபர், போரிஸ் ஜான்சனை திட்டிய அனைத்தையும் எழுதினால் பத்து பக்கங்களுக்கு எழுதலாம், அவ்வளவு மோசமாக திட்டியிருக்கிறார் அவர்.

சர்வாதிகாரி, நாட்டை முடமாக்கிவிட்டார், கோழை என்றெல்லாம் பட்டாசு போல் வெடித்துள்ள ஜெனிபர், மெதுவாக இன்னொரு விடயத்தையும் சொல்லியிருக்கிறார்.

போரிஸ் ஜான்சனைவிட, நிதிப் பொறுப்பை வகிக்கும் ரிஷி நன்றாக ஆட்சி செய்வார் என்று போகிற போக்கில் கொளுத்திப்போட்டிருக்கிறார் ஜெனிபர். ஆனால், இன்னமும் போரிஸ் பக்கத்திலிருந்து பதில் எதையும் காணவில்லை!

Related Posts

Leave a Comment