விமானங்களால் உடல்நலத்திற்கு அதிக ஆபத்து! இரவில் பறக்க தடை வேண்டும்: பிரித்தானியா மக்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிய முக்கிய கடிதம்

by News Editor
0 comment

பிரித்தானியாவில் இரவில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என பிரச்சாரகாரர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமானத்திலிருந்து வரும் கூடுதல் சத்தத்தால் விமானப்பதையின் கீழ் வாழும் குடியிருப்பாளர்கள் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்து 17 சமூக மற்றும் சுற்றுச்சுழல் குழுகள் விமான அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

எதிர்காலத்தில் இரவு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனையைத் தொடங்க அரசாங்கம் தயாராகி வருவதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அவசரகால அல்லது மனிதாபிமான விமானங்களை மட்டுமே இரவு மற்றும் அதிகாலையில் அனுமதிக்க வேண்டும் என்றும், குடியிருப்பாளர்களுக்கு இரவு 8 மணி நேரம் நிம்மதியாக தூங்க இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குழு தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் விமான சுற்றுச்சூழல் கூட்டமைப்பு, விமான சமூகங்கள் குழுக்கள் மற்றும் பல விமான நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் குறிக்கும் உள்ளூர் குழுக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அவற்றில் சவுத்தாம்ப்டன், கேட்விக், ஹீத்ரோ, லூடன், பிரிஸ்டல், ஸ்டான்ஸ்டெட், ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் மற்றும் கிளாஸ்கோ ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அடங்குவர்.

முன்னர் ஐரோப்பிய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், இரவில் சத்தத்தின் அளவு சிறிய அளவில் அதிகரிப்பது உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டது.

பக்கவாதம் மற்றும் இதய நோய்களுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தும் உள்ளதாம்.

ஹீத்ரோ, கேட்விக் மற்றும் ஸ்டான்ஸ்டெட் ஆகிய மூன்று பெரிய விமான நிலையங்களில் இரவு விமானங்களை கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறைக்கு நேரடி அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment