தாத்தா ஆனார் நடிகர் சீயான் விக்ரம்.. அவரின் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது..மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

by News Editor
0 comment

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு துருவ் விக்ரம் மகன் மற்றும் அக்ஷிதா எனும் ஒரு மகள் இருக்கிறார்கள். சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. விக்ரம் மகள் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இதனால் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார். மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Posts

Leave a Comment