மீண்டும் வருகிறது ட்ரம்ப் ஆட்சி: பரபரப்பை கிளப்பிய மைக் பாம்பியோ

by News Editor
0 comment

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. வெற்றிக்கு தேவையான 270 இடங்களை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வென்றுவிட்ட்டார்.

ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தங்களுடைய வெற்றி ஏற்பு உரையை ஆற்றுவிட்டனர்.

ஆனால் ட்ரம்ப் தரப்பும் குடியரசுக் கட்சியும் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூட ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார். கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து வாழ்த்து தெரிவித்துவிட்டன.

தேர்தலில் தோற்றால் ஆட்சி மாற்றத்திற்கு ட்ரம்ப் ஒத்துழைக்க மாட்டார் என்கிற அச்சத்திற்கு சான்றாகவே அவருடைய செயல்களும் இருந்து வருகிறது.

மறுவாக்குப்பதிவு வேண்டும் என ட்ரம்ப் கோரி வருகிறார். அதற்காக பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்து வருகிறார். ஆனால் இதில் தற்போது வரை ட்ரம்புக்கு தோல்வியே கிடைத்துள்ளன. ட்ரம்ப் தொடர்ந்த பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என தற்போது வரை ட்ரம்ப் ட்வீட் செய்து வருகிறார். ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளும் தற்போது வரை தொடங்கப்படாமலே இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி மாற்றம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். விரைவில் அது தொடர்பான சாதகமான அறிவிப்புகளை காண்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒரு அமைச்சரே இவ்வாறு பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment