70 வயது முதியவரை திருமணம் செய்த அழகான இளம்பெண்; காரணம் இதுதானாம்?

by News Editor
0 comment

சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 70 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் மற்றும் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த திருமணத்திற்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

இவ்வளவு அழகான பெண் அந்த 70 வயது முதியவரையா? திருமணம் செய்வது எனவும், இதற்கு பணம்தான் காரணம், பணத்திற்க்காக இப்படியா செய்வது என பலரும் அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்து வந்தனர்.

இந்த பேச்சுக்களை கேட்டு ஒரு கட்டத்தில் அந்த பெண் இணையத்தில் பதிவிட்ட அனைத்து புகைப்படங்களை நீங்கினார்.

அதன்பின்னர், அந்த 70 வயது முதியவரை தான் ஏன் திருமணம் செய்துகொண்டேன் என அந்த பெண் தற்போது விளக்க கொடுத்துள்ளார்.

அந்த பதிவில், எனது கணவரின் வாழ்க்கையில் எல்லாமே நான் தான், அதாவது தன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அவரது உயிரே நானாக இருக்கிறேன்.அவரின் அளவு கடந்த பாசத்தை பார்த்துதான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என பதிவிட்டுள்ளார்.

ஆனாலும், அந்த பெண் கூறியதை கேட்டும் நெட்டிசன்கள் அதை நம்பாமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

Related Posts

Leave a Comment