ட்ரம்ப் பதவி விலகப்போவதில்லை.! தேர்தல் தோல்விக்கு பிறகு என்ன திட்டத்தில் இருக்கிறது ட்ரம்ப் தரப்பு?

by News Editor
0 comment

ஆனால் ட்ரம்ப் தரப்பிலும் குடியரசுக் கட்சியிலும் மயான அமைதி நிலவி வருகிறது. தேர்தலில் தோற்றுவிட்டால் ஆட்சி மாற்றத்திற்கு ட்ரம்ப் முழுமையாக ஒத்துழைக்கமாட்டார் என முன்பே பல ஆரூடங்கள் சொல்லப்பட்டன.

அதற்கு ஏற்றார் போலவே தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து பேசி வருகிறார் ட்ரம்ப். மேலும் தபால் வாக்குகள் செல்லாதவை, உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்.

ட்ரம்ப் தொடர்ந்த பல்வேறு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் எப்படியாவது ஆட்சியில் தொடர ட்ரம்ப் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூட ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் தோல்வியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ட்ரம்ப் தரப்பு தெரிவித்து வருகிறது.

மரபுகளின்படி தேர்தலில் தோற்றவர் வெற்றி பெற்றவருக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவிப்பதும் தேர்தல் முடிவுகளை ஏற்று உரையாற்றுவதும் வழக்கம். ட்ரம்ப் தரப்பு அதை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஆட்சி மாற்றத்திற்கான பணிகளையும் தொடங்காமல் இருந்து வருகிறது. இனிவரக்கூடிய நாட்களில் என்ன நிகழக்கூடும் எனப் பலரும் அச்சத்தில் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு ட்ரம்ப் ஒத்துழைக்கவில்லை என்றால் அது உள்நாட்டு பதற்றத்தை அதிகரிக்கும் என்பது மட்டும் நிச்சயம்

Related Posts

Leave a Comment