‘Wedding Photoshoot’ எடுக்கச்சென்ற மணமக்களுக்கு போட்டோகிராபரால் நேர்ந்த சோகம்

by News Editor
0 comment

திருமணத்துக்கு முந்தய ‘வெட்டிங் போட்டோஷூட்’ எடுப்பதற்காக காவிரி ஆற்றுக்குச் சென்ற மணமக்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்துக்கு முன்பு மணமகனும் மணமகளும் இணைத்து பல்வேறு போஸ் கொடுத்து அதனை புகைப்படம் எடுப்பது தற்போது வழக்கமாகிவிட்டது.

அதுவும் தற்போதுள்ள புகைப்பட கலைஞர்கள் தங்களது திறமையைக் காட்ட விதவிதமாக புகைப்படம் எடுக்கவும் செய்கிறார்கள்.

இந்தநிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த சந்துரு மற்றும் சசிகலா ஆகியோருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகிற நவம்பர் 22ம் தேதி திருமண நாளாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனால் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் எடுப்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மணமக்களை அழைத்துக்கொண்டு காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் புகைப்பட கலைஞர் ஒரு படகிலும் மணமக்கள் இன்னொரு படகில் இருந்துள்ளனர் படகின் ஒருமுனையில் மணமக்களும் மறுமுனையில் படகோட்டியையும் நிற்கவைத்துள்ளார்.

அப்போது முன்பக்க பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் மணமகன் சந்துருவும், மணமகள் சசிகலாவும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்.

படகோட்டிக்கு நீச்சல் தெரிந்ததால் நீந்தி கரைக்கு வந்துவிட்டார், ஆனால் நீச்சல் தெரியாத மணமக்கள் நீரிலே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புகைப்படங்களை பிரமாண்டமாக எடுப்பதாக புகைப்படக்காரர்கள் எடுக்கும் சில முடிவுகள் விபரீதத்தில் போய் முடிந்து விடுகின்றன.

Related Posts

Leave a Comment