சீனிக்கான விலை நிர்ணயம் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

by Editor
0 comment

சீனிக்கான அதிகப்பட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார ஆணையத்தின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசானநாயக்கவால் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment