லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Lankan Editor
0 comment

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 46 பேர் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதுடன் ஏனைய 10 பேரில் 05 வைத்தியர்கள், 02 தாதியர்கள் மற்றும் 03 சிற்றூழியர்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் அனைவரும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 90 வைத்தியசாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment