இந்த வாரம் எவிக்ஷன் ப்ராசஸில் புதிதாக சேர்க்கப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் இவர்கள் தான்!

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இதில் அர்ச்சனா, சுசித்ரா இரண்டு பேர் சஸ்பென்ஸ் எண்ட்ரி கொடுக்க, வேல்முருகன், ரேகா இருவரும் வெளியேறினர். பின்னர் மீண்டும் 16 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் ஆட்டம் தொடங்கியது.

கோபம், சண்டை, அழுகை, சிரிப்பு, காதல், அன்பு என பலதரப்பட்ட முகங்களை நம்மால் காண முடிந்தது. இதையடுத்து நேற்றைய நிகழ்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து மூன்றாவது நபராக வெளியேறினார்.


இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் கேபி, சம்யுக்தா, சுசித்ரா, அனிதா, ஷிவானி, அர்ச்சனா, பாலாஜி, ரம்யா, ஆஜித் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். குறிப்பாக கேபி பெயரை சொன்னதும் அவரும் மற்ற ஹவுஸ்மேட்ஸும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர்.

Related Posts

Leave a Comment